மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற மூன்று பேர் கைது
05-Jul-2025
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, காமக்காப்பட்டி பகுதியில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, அம்மாபட்டியை அடுத்த வில்லப்பம்பட்டி வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ், 63; இவர், கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, அரவக்குறிச்சி அருகே, காமக்காப்பட்டி பகுதியில் சென்றுகொண்-டிருந்தார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம், பேராவூர் பகு-தியை சேர்ந்த கோவிந்தவேலு என்பவரது மகன் ராஜசேகர், 35, ஓட்டிவந்த, 'மாருதி ஸ்விப்ட் டிசையர்' கார் டூவீலர் மீது பயங்கர-மாக மோதியது.இதில், துாக்கி வீசப்பட்ட முத்துராஜ், சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து முத்துராஜ் மனைவி வளர்மதி, 52, அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Jul-2025