உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டி.என்.பி.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி

டி.என்.பி.எல்., பள்ளியில் ஓவிய கண்காட்சி

கரூர்: புகழூர், டி.என்.பி.எல்., பப்ளிக் பள்ளியில் ஓவிய கண்காட்சி நடந்தது.டி.என்.பி.எல்., காகித ஆலை நிறுவனத்தின் பொது மேலாளர் பிரின்ஸ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வகுப்பு வாரியாக மாணவர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. சிறப்பாக ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்-டது.நிகழ்ச்சியில் புகழூர் டி.என்.பி.எல்., பள்ளிகளின் செயலர் செல்-வராஜ், துணை செயலர் தினகரன், பள்ளி முதல்வர் அங்கயற்-கண்ணி உள்பட பலர் பங்கேற்றனர்.மரக்கன்றுகள் பராமரிப்பு பணிகிருஷ்ணராயபுரம், ஜன. 1கொம்பாடிப்பட்டி சாலையோர இடங்களில் நடப்பட்ட மரக்கன்-றுகளுக்கு, தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து கொம்-பாடிப்பட்டி வல்லம் வரை தார்ச்சாலை உள்ளது. இருபுறமும் பஞ்சாயத்து சார்பில், பல்வேறு வகையான நிழல் தரும் மரக்கன்-றுகள் நடப்பட்டன. 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணியும், வேலி பாது-காப்பு பணியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்