உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாம்பாலம்மன் கோவில் விழா; காவிரி தீர்த்தம் எடுத்த பக்தர்கள்

பாம்பாலம்மன் கோவில் விழா; காவிரி தீர்த்தம் எடுத்த பக்தர்கள்

கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை, காஞ்சிநகர் பகுதியில் உள்ள பாம்பாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை காஞ்சிநகர் பகுதியில் பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இங்கு திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் காவிரி தீர்த்தக்குடங்களை எடுத்து கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.பாம்பாலம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தன. நுாற்றுக்கணக்கானோர் விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ