உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பசுபதிபாளையம் குகை வழிப்பாதை மழை நீர் தேங்கி நிற்பதால் அவதி

பசுபதிபாளையம் குகை வழிப்பாதை மழை நீர் தேங்கி நிற்பதால் அவதி

கரூர்: கரூர் பசுபதிபாளையத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்-புகள் உள்ளன. கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல் செல்லும் அகல ரயில் பாதை இவ்வழியாக செல்கிறது. தினமும் ஏராளமான ரயில்கள் செல்வதால், பசுபதிபாளையம் ரயில்வே கேட் பலமுறை மூடப்படும். போக்குவரத்து பாதிக்கப்-பட்டதால், இப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகினர். குகை வழிப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதியினரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 2019ல் குகைவழிப்பாதை அமைக்கப்-பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.சில நாட்களாக கரூர் பகுதியில் பரவலான மழை பெய்து வருகி-றது. சரியான வடிகால் வசதி இல்லாததால், குகை வழிப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதில் கழிவுநீரும் கலந்து விடுவதால், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சரியாக திட்டமிடாமல் கட்டப்-பட்டுள்ளதால், சிறிது மழைக்கே பாதையில் தண்ணீர் தேங்கியுள்-ளதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர். உடனடியாக தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை