உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்களை நிறுத்த வேண்டும்

கரூர் : கரூர்-சேலம் சாலையில் உள்ள மண்மங்கலத்தில், பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இப்பகுதியில் தாலுகா அலுவலகம், வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் உள்ளது. ஆனால், பஸ்களை பயணிகள் நிழற்கூடம் எதிரே நிறுத்தாமல், தள்ளி நிறுத்துகின்றனர். இதனால், பயணிகள் நிழற்கூடம் முன் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். மழையிலும், வெயிலிலும் பயணிகள் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மண்மங்கலம் நிழற்கூடம் முன், பஸ்களை நிறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ