உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தேங்கிய குப்பையால் மக்கள் கடும் அவதி

தேங்கிய குப்பையால் மக்கள் கடும் அவதி

கரூர்:கரூர் அருகே, வாங்கல் சாலையில் குப்பை சேகரிப்பு தொட்டி இல்லாததால், பொதுமக்கள் சாலையோரம் குப்பையை கொட்டி வருகின்றனர். அந்த குப்பையை முறையாக அள்ளாததால், மலைபோல் தேங்கி கிடக்கிறது. காற்று பலமாக வீசும்போது குப்பைகள் பறந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் அபாயம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகின்றன. மழைக்காலங்களில் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை நாள்தோறும் அகற்ற, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை