உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட எட்டியாக்கவுண்டனுார் பகுதியில், 50 குடும்பத்திற்கும் மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், மூன்று மாதங்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த இப்பகுதி மக்கள் வரும் திங்கள் அன்று சாலை மறியல் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி, அரவக்குறிச்சி டி.எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளனர்.பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தனிடம் மனு கொடுக்க சென்றபோது, 'குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீர் வழங்கப்படவில்லை, பணியை விரைந்து முடித்து திங்கட்கிழமை காலை குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என' தெரிவித்தார். கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், 50 குடும்பங்கள் வசித்து வரும் பகுதிக்கு குடிநீர் வழங்கப்படாதது வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்