உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாதாள சாக்கடை சீரமைப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தல்

பாதாள சாக்கடை சீரமைப்பு பகுதியில் சாலை அமைக்க மக்கள் வலியுறுத்தல்

கரூர்: கரூர், கோடீஸ்வரர் கோவில் முன்புறம் பாதாள சாக்கடை சீர-மைப்பு பணி நடந்த இடத்தில், தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்-பாட்டில் உள்ளது. அதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. இந்நிலையில், பாதாள சாக்-கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ராஜாஜி சாலை, ரத்தினம் சாலை, அண்ணாவளைவு, கோவை சாலை ஆகிய இடங்களில், பல முறை பள்ளம் ஏற்பட்டது. அதை, பல மாதங்கள் போராடி புதிய குழாய்கள் போடப்பட்டு சரி செய்யப்பட்டது.இதுபோல, கரூர் ஐந்து ரோடு கோடீஸ்வரர் கோவில் முன்புறம் மீண்டும் பள்ளம் விழுந்துள்ளது. அங்கு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பள்ளம் மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால், தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர் கீழே விழுகின்றனர். உடனடியாக தார்ச்சாலை அமைக்க, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ