உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயணிகள் நிழற்கூடம் கட்ட மக்கள் வேண்டுகோள்

பயணிகள் நிழற்கூடம் கட்ட மக்கள் வேண்டுகோள்

தான்தோன்றிமலை: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், கரூர் நகருக்கு செல்லும் பகுதியில், பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெள்ளியணை சாலையில் நிழற்கூடம் இல்லை. பழைய நிழற்கூடம் சேதம் அடைந்த நிலையில் உள்ளது.இதனால், கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வரும், வெள்ளியணை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் கடும் அவதிப்படுகின்றனர். இதனால், வெள்ளி யணை சாலையில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ