உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மயானம் வசதி கோரி கலெக்டரிடம் மனு

மயானம் வசதி கோரி கலெக்டரிடம் மனு

கரூர், டிச. 24-மயான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, மக்கள் கலை இலக்கிய கழக மாவட்ட செயலாளர் அரசப்பன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம், பள்ளாபாளையம் பஞ்.,ல், பட்டியல் இனத்தவர் ஏராளமானோர் வசிக்கின்றனர். பல்வேறு பிரிவு மக்களுக்கு மயானம் உள்ளது. குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு மட்டும் மயானம் இல்லை. இதனால், பள்ளாபாளையம் வாய்க்காலை கடந்து சென்று, உடல்களை அடக்கம் செய்ய வேண்டி உள்ளது. மழை காலத்தில் மற்றும் வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது, தண்ணீரில் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, எங்களுக்கும் மயான வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை