உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொங்கல் பரிசு வழங்கும் விழா

பொங்கல் பரிசு வழங்கும் விழா

கரூர்: கரூர் மாவட்ட பொது வினியோக திட்டத்தின் கீழ், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா, ஆச்சி மங்கலம் ரேஷன் கடையில் நேற்று நடந்தது.அதில், 956 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு மற்றும், 1,000 ரூபாய் வழங்கும் பணியை, கலெக்டர் தங்கவேல் தொடங்கி வைத்தார்.விழாவில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் பிச்சைவேலு, கரூர் சரக துணைப்பாளர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர். * கிருஷ்ணராயபுரம், டவுன் பஞ்சாயத்து வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கு, ரேஷன் கடைகள் மூலம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். டவுன் பஞ்சாயத்து தலைவர் சேதுமணி, கிருஷ்ணராயபுரம் தி.மு.க., நகர செயலாளர் சசிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* குளித்தலை நகராட்சி வைசியாள் தெரு, வையாபுரி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். குடும்ப கார்டுதாரர்களுக்கு, எம்.எல்.ஏ., மாணிக்கம் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.இதேபோல், மேட்டுமருதுார் ரேஷன் கடையில் டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுாரில் டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி, கவுண்டம்பட்டியில் துணைத்தலைவர் அன்பழகன், நங்கவரம் ரேஷன் கடையில் நகர செயலாளர் முத்து ஆகியோர், பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ