உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இடப்பிரச்னை தீர்க்க வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

இடப்பிரச்னை தீர்க்க வேண்டி பொங்கல் வைத்து வழிபாடு

கரூர், இடப்பிரச்னையை தீர்க்க வேண்டி, கரூர் வெண்ணைமலை கோவில் முன், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடங்களை மீட்க கோரி, உயர்நீதி-மன்றம் மதுரை கிளையில், திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார்.அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதி-மன்றம் உத்தரவிட்டது. இதில் முறையாக நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், கோவில் நிலங்களை மீட்காவிட்டால், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரித்தது. அதன்படி மீட்பு நடவடிக்கையில் அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டித்து கடந்த, 20ல் கரூர் காங்.,- எம்.பி., ஜோதிமணி, அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் ஆகியோர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் முன், அப் பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அப்போது, 'பல ஆண்டுகளாக முறையாக பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் பெற்று வசித்து வருகிறோம். நீதிமன்றம் உத்தரவால், குடியிருக்கும் வீடுகளை சீல் வைக்கும் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளை கூட்டிக்கொண்டு எங்கே செல்வது தெரியவில்லை. இப்பிரச்னையை தீர்க்க வேண்டி, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, இறைவனிடம் முறையிட்டு இருக்கிறோம் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி