உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: டி.என்.பி.எல்., உணவு வழங்கல்

வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு: டி.என்.பி.எல்., உணவு வழங்கல்

கரூர், காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், கரையோர பகுதிகளான, கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர், தவுட்டுப்பாளையம் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து, தவுட்டுப்பாளையம் கிராம சேவை மையத்தில், 37 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மருத்துவ பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் அனைவரையும் சேர்த்து, 150 பேருக்கு, புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மூலம் காலை, மதியம், இரவு ஆகிய, 3 வேளையும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை, காகித நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி