உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கடும் பனிப்பொழிவால் கோழி அவரைக்காய் விலை அதிகரிப்பு

கடும் பனிப்பொழிவால் கோழி அவரைக்காய் விலை அதிகரிப்பு

கரூர்: தொடர்மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, அவரைக்காய் வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த, 15 நாட்களாக பட்டை அவரைக்காய் உள்-ளிட்ட காய்கறிகளின் விலை, உயர தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஒரு கிலோ, பட்டை அவரைக்காய், 60 ரூபாய் வரை விற்றது. நேற்று கிலோ, 100 ரூபாய்க்கு கரூர் உழவர் சந்தை மற்றும் காமராஜ் தினசரி மார்க்கெட்டில் விற்பனையானது. அதேபோல், கோழி அவரை, 80 ரூபாயில் இருந்து, 130 ரூபா-யாக விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:கடந்த, இரண்டு மாதங்களாக மழை மற்றும் கடும் பனிப்பொ-ழிவால் அவரை செடிகள் கருகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. மேலும், பூச்சி தாக்குதலால் கோழி அவரை, பட்டை அவ-ரைக்காய் வரத்து குறைந்து விட்டது. இதனால், கோழி அவரை, பட்டை அவரை விலையும் அதிகரித்துள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ