உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க நடவடிக்கை குழு ஆலோசனை

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்க நடவடிக்கை குழு ஆலோசனை

கரூர், : தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்-களின் கூட்டு நடவடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், ஒருங்கிணைப்பாளர் இருதய சாமி தலைமையில், நேற்று தனியார் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்; தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அர-சாணை எண், 243ஐ திரும்ப பெற வேண்டும்; மத்-திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; முடக்கப்பட்ட சரண்டர் மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வரும், 29 முதல் சென்னை டி.பி.ஐ.,யில் நடக்க உள்ள, முன்று நாள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்-டத்தில், கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை