ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே பொது கழிப்பிடம் தேவை
அரவக்குறிச்சி, டிச. 14-அரவக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே வடக்கு தெரு பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிப்போரின் பலரது வீடுகளில் கழிப்பிடம் வசதி இல்லை.கூலி வேலை செய்து வரும் இவர்கள், இயற்கை உபாதை கழிக்க, நங்காஞ்சி ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே அசுத்தமாக இருக்கும் நங்காஞ்சியாற்றில், காலை கடனை கழிப்பதால் மேலும் அசுத்தமாகி அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.எனவே, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே நங்காஞ்சி ஆற்றுக்கு செல்லும் பாதையில் பொது கழிப்பிடம் கட்ட, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.