உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி பொது பணித்துறை அலுவலகம் முற்றுகை

பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க கோரி பொது பணித்துறை அலுவலகம் முற்றுகை

குளித்தலை:குளித்தலை தென்கரை, கட்டளை மேட்டு வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி, குளித்தலை நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அலுவலகத்தை, விவசாயிகள் முற்றுகையிட்டனர். குளித்தலை, பெரிய பாலத்தில் உள்ள பொது பணித்துறை நீர்வளத்துறை பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை, தென்கரை வாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின் அவர்கள், உதவி செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணனை சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகள், தங்கள் பகுதியில் வாழை, வெற்றிலை தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்றனர்.விவசாயிகளின் கோரிக்கைகளை, திருச்சி தலைமை பொறியாளரிடம் கொண்டு சென்று, இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முற்றுகை போராட்டத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ