மேலும் செய்திகள்
குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
21-Aug-2025
கரூர், கரூர் அருகே, புகையிலை குட்கா பொருட்களை கடத்தியதாக, வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, போலீஸ் எஸ்.ஐ., பாலசுப்பிரமணியம் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டாடா பன்ச் காரை நிறுத்தி போலீசார், சோதனை நடத்தினர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 10 கிலோ, 800 கிராம் புகையிலை குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் பகுதியை சேர்ந்த கோத்ராம் படேல், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், காரில் இருந்த இரண்டு லட்சத்து, 6,000 ரூபாயை, தோகைமலை போலீசார் பறிமுதல் செய்தனர்.
21-Aug-2025