உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் போக்குவரத்து பணிமனையில் தற்காலிக பணிக்கு ஆட்கள் தேர்வு

கரூர் போக்குவரத்து பணிமனையில் தற்காலிக பணிக்கு ஆட்கள் தேர்வு

கரூர்: கரூர் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து பணிமனையில், தற்காலிக டிரைவர், கண்ட க்டர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகம் முழுவதும் நேற்று சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட, 24 போக்குவரத்து தொழிற்சங்கள், 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று முதல், வேலை நிறுத்தம் தீவிரம் அடையும் என, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து, நேற்று கரூர் திருமாநிலையூர் போக்குவரத்து பணிமனையில், தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.முதல் கட்டமாக, கரூர் வட்டார போக்கு வரத்து அலுவலகம் வழங்கிய, பரிந்துரை அடிப்படையில், 30 டிரைவர்கள், 20 கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நிரந்தர பணியாளர்கள் ஆப்சென்ட் ஆகும் பட்சத்தில், தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கரூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை