உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ராமர் பாண்டி உடலை வாங்க 5வது நாளாக உறவினர்கள் மறுப்பு

ராமர் பாண்டி உடலை வாங்க 5வது நாளாக உறவினர்கள் மறுப்பு

கரூர்: அரவக்குறிச்சி அருகே, கொலை செய்யப்பட்ட ராமர் பாண்டி உடலை, உறவினர்கள் ஐந்தாவது நாளாக நேற்றும் வாங்க மறுத்து விட்டனர்.மதுரை மாவட்டம், அனுப்பானடியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 38; தேவேந்திரர் குல மக்கள் சபை கட்சியின் நிறுவனர். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 19ல் கரூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு, மதுரைக்கு புறப்பட்ட ராமர் பாண்டியை, அரவக்குறிச்சி அருகே, தேரப்பாடி பிரிவு பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள், அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.ராமர் பாண்டி உடல் வைக்கப்பட்டுள்ள, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் கடந்த, 20, 21ல் சாலை மறியல் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ராமர் பாண்டி கொலை வழக்கு தொடர்பாக சரண் அடைந்த மதுரையை சேர்ந்த தர்மா, 25; உள்ளிட்ட ஐந்து பேரை அரவக்குறிச்சி போலீசார், நேற்று முன்தினம் இரவு போலீஸ் காவலில் எடுத்து, ரகசிய இடத்தில் தங்க வைத்து விசாரித்து வருகின்றனர்.ஆனால், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், ராமர் பாண்டி மனைவிக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, ராமர் பாண்டி உடலை வாங்க அவரது உறவினர்கள் நேற்றும் மறுத்து விட்டனர். இதனால் ராமர் பாண்டியின் உடல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வளாகத்தில் கரூர் டவுன் போலீஸ் டி.எஸ்.பி., சரவணன் தலைமையில், போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை