உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க வேண்டுகோள்

கரூர்:போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவில் ரவுண் டனா அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கரூர்- கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவு உள்ளது. இந்த வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் தாராபுரம், பழநி, பொள்ளாச்சி உள் ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.சின்னதாராபுரம் பிரிவில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. பெரும்பாலும் போலீசார், சின்னதாராபுரம் பிரிவில் பணியில் இருப்பது இல்லை. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், கோவை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ரவுண்டானா அமைக்க முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை