உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலை பராமரிப்பு ஊழியர்கள் முதல்வருக்கு கோரிக்கை கடிதம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் முதல்வருக்கு கோரிக்கை கடிதம்

கரூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் (அன்ஸ்கில்டு) சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், நேற்று முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.தமிழகத்தில் சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு கணக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் சாலை பணியாளர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பினர்.அதேபோல், கரூரில் மாவட்ட செயலாளர் சிங்கராயர் தலை-மையில், 20க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள், தலைமை தபால் நிலையத்தில் கோரிக்கை கடிதம் அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை