மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்ற சிறப்பு குழு கரூரில் ஆய்வு
04-Dec-2025
ஈரோடு சாலையோரம் குப்பை குவியல்
03-Dec-2025
கொம்பாடிப்பட்டியில் துாய்மை பணி மும்முரம்
03-Dec-2025
வாய்க்காலை துார் வார விவசாயிகள் கோரிக்கை
03-Dec-2025
கரூர்: ஆகாயத்தாமரையிலிருந்து, சானிட்டரி நாப்கின் தயாரிக்கலாம் என, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு சார்பில், குழந்தைகள் அறிவியல் மண்டல மாநாடு கடந்த, 22ல் நடந்தது. இப்போட்-டியில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில், கரூர் ஸ்ரீ சங்கரா வித்யாலயா பள்ளியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவியர் ஹிவன்ஷிகா, சஞ்சிதா ஆகியோர், வழிகாட்டி ஆசிரியர் ராஜ-சேகரன் உதவியோடு, ஆகாயத்தாமரை தாவரத்-திலிருந்து பயனுள்ள பொருட்கள் என்ற தலைப்பில், ஆய்வு கட்டுரையை மண்டல அளவி-லான போட்டியில் சமர்ப்பித்துள்ளனர்.இது குறித்து மாணவியர் ஹிவன்ஷிகா, சஞ்-சிதா கூறியதாவது: கரூரில் ஆறுகள், வாய்க்காலில் ஆகாயத்தா-மரை தாவரம் படர்ந்துள்ளது. ஆகாயத்தாமரை என அழைக்கப்படும் தாவரம், சுற்றுச்சூழலில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகி-றது. இது சூரிய ஒளியை தடுக்கிறது. நீர் ஓட்-டத்தை குறைத்து மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட காரணமாக அமைகிறது. காற்றில் இருந்து நீருக்கு வரக்கூடிய ஆக்ஸிஜன் அளவை கணிசமாக குறைத்து, மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களை பெருமளவு பாதிப்பு ஏற்-படுத்தி பல்லுயிரியலை குறைக்கிறது.இந்நிலையில் இந்த தாவரத்தை பயன்படுத்தி, பயனுள்ள பொருட்கள் உருவாக்கலாம் என்ற முயற்சியில் இறங்கினோம். ஆகாயத்தாமரை தாவரத்தின் தண்டு மற்றும் மொட்டு பகுதிகளை ஆய்வு செய்தோம். அதில், அதிகளவு நீரை உறிஞ்-சக்கூடிய தன்மை இருந்தது தெரியவந்தது. பின்னர் இதை அரைத்து காயவைத்து, சானிட்டரி நாப்கின்கள் மற்றும் காகித அட்டை பெட்டி போன்ற மட்கக்கூடிய பொருட்களை உருவாக்-கினோம். இதன் உறிஞ்சும் திறன் மற்றும் அமி-லத்தன்மை இவற்றை ஆய்வகத்தில் பரிசோ-தனை செய்தோம். இதில், 30 சதவீதம் செல்-லுலோஸ் என்ற பொருள் இருப்பதால், பேப்பர் போன்ற பொருளாக மாற்றுவது எளிது.தற்போது தயாரிக்கப்படும் சானிட்டரி நாப்கின்-களில், பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களை மூல பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகி-றது.இதனால், பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னை உருவாகிறது. இதுபோன்ற, இயற்கை சார்ந்த பொருட்களை உருவாக்கும்போது உடலுக்கு எவ்-வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்-ளது. பருத்தி, மூங்கில்கள் மூலம் உருவாக்கக்கூடிய சானிட்டரி நாப்கின்கள் சமீப காலமாக பயன்-பாட்டில் உள்ளது. இந்த தயாரிப்புகளுக்கு உற்-பத்தி செலவு, அதிக நீர் தேவைப்படுகிறது. ஆகா-யத்தாமரை மூலம் பொருட்களை தயாரிக்கும்-போது செலவு, நீர் தேவை மிக குறைவு. இந்த தாவரத்தை சானிட்டரி நாப்கின்களாக உருவாக்-குவது சாத்தியமே. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
04-Dec-2025
03-Dec-2025
03-Dec-2025
03-Dec-2025