உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / க.பரமத்தி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

க.பரமத்தி அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

கரூர்: க.பரமத்தி அருகே, மணல் கடத்தப்பட்ட லாரியை, வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம், அமராவதி ஆற்றுப்பகுதியில், இரவு, அதி-காலை நேரங்களில் மணல் கடத்துவதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இதையடுத்து, புகழூர் தாசில்தார் தனசே-கரன் தலைமையில், ஆர்.ஐ.,க்கள், வி.ஏ.ஓ.,க்கள் தலைமையில், நேற்று அதிகாலை, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலை பவித்-திரம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, லாரி ஒன்றில் மூன்று யூனிட் மணல் கடத்தப்பட்டது தெரிய வந்-தது. இதையடுத்து, ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் மோகன், 40, என்பவரை பிடித்து, வருவாய் துறை அதிகாரிகள் க.பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். லாரியும் பறி-முதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ