உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூட்டம்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இதில், மாவட்டத்தில் உள்ள, 4 தொகுதிகளில், 1,055 ஓட்டுச்சாவடிகளுக்கு நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் வீடு, வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில், கணக்கெடுப்பு படிவங்களை விரைவில் கொடுத்து முடிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை டிச., 4க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட, இரட்டை கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கையொப்பமிட்ட இரண்டு படிவங்களில் ஒரு படிவத்தினை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மற்றொரு கணக்கீட்டு படிவத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் படிவத்தை பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக, தன் கையொப்பமிட்டு வழங்க வேண்டும். கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து, திரும்ப சமர்ப்பிக்காத வாக்காளர் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. கணக்கெடுப்பு பணிகள் முடிவுற்ற பின்பு, வரைவு வாக்காளர் பட்டியலானது டிச.,9ல் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கூட்டத்தில், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை