தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு கல்லுாரியில் பேச்சு போட்டி
கரூர்: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பேச்சு போட்டி வரும், 24ல் நடக்கிறது.தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் நினைவிடங்களில், அவர்களின் பிறந்தநாளன்று உள்ளுர் இலக்கிய அமைப்புகள் மூலம் ஆண்டு தோறும் கவியரங்கம், கருத்தரங்கம், இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களை பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, வா.செ.குழந்தைசாமி, நன்னியூர் நாவரசன் இறையரசன், இளமுருகு பொற்செல்வி ஆகியோருக்கு வரும், 28ல் இலக்கியக் கூட்டம் நடக்கிறது.இதற்கு முன்னதாக, கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லுாரியில் வரும், 24 காலை, 10:00 மணிக்கு பேச்சு போட்டி நடக்கிறது. இதில், 8 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்படும். இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.