உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கருப்பசாமி கோவில் பிரச்னை கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

கருப்பசாமி கோவில் பிரச்னை கரூர் கலெக்டரிடம் மனு வழங்கல்

கரூர், கடவூர் அருகே உள்ள வந்தவழி கருப்பசாமி கோவிலில், குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்களிடம் இருந்து உபய பொருட்களை வாங்க மறுப்பதாக, அப்பகுதி மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், கூறியிருப்பதாவது:கடவூர் வட்டத்திற்கு உட்பட்ட சிங்கம்பட்டியில் வழிவந்த கருப்ப சாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாத கடைசி வியாழக்கிழமை அன்று, கோவில் தர்மகர்த்தா கிராமம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவை சேர்ந்த மக்களிடமிருந்து, நன்கொடை பெற்று பூஜை செய்வது வழக்கம். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் மட்டும் உபய பொருட்கள் பெறாமல் இருக்கின்றனர். கடந்த, 15 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பிரச்னை இருந்து வருகிறது. இதில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லை என்றால், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை