உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின் விளக்குகளால் அவதி

ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின் விளக்குகளால் அவதி

கரூர்: கரூர் - திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில், சின்னமநாயக்கன்பட்டி பிரிவில் இருந்து, கத்தாளப்பட்டி புதுார் பகுதிக்கு செல்லும் சாலையில், குகை வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 1,100 அடி கொண்ட அந்த குகை வழிப்பாதை வழியாக, செல்லிப்பாளையம், கத்தாளப்பட்டி, கொங்குநகர், புதுார், சின்னதம்பிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பொதுமக்கள் சென்று வருகின்றனர்.ஆனால், குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் இல்லாததால், அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள், சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனால், தரை மட்டத்தில் இருந்து, 15 அடி வரை பள்ளத்தில் உள்ள குகை வழிப்பாதையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, ரயில்வே குகை வழிப்பாதையில், மணவாடி பஞ்சாயத்து சார்பில், 100 அடிக்கு ஒரு மின் விளக்கு அமைக்கும் வகையில் பணிகள் கடந்த, 2021ல் நடந்தது. தற்போது, ரயில்வே குகை வழிப்பாதையில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் எரிவது இல்லை.இதனால், குகை வழிப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள், பெரும் அவதிப்படுகின்றனர். எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில் உள்ள அனைத்து மின் விளக்குகளையும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேணடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ