உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கழிவறையில் வீடியோ எடுத்த டீ மாஸ்டர் கைது

கழிவறையில் வீடியோ எடுத்த டீ மாஸ்டர் கைது

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த வெண்ணந்துார் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகன் நாகராஜ், 27; ஆண்டகலுார் கேட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.இந்த டீக்கடை அமைந்துள்ள காம்ப்ளக்சில் பொதுக்கழிப்பறை உள்ளது. இதை, அருகில் கடையில் வேலை செய்யும் பெண்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று நாகராஜ் பொதுக்கழிவறையில், தன் மொபைல் போனில் உள்ள வீடியோ கேமராவை ஆன் செய்து வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன்பின், கழிவறை சென்ற ஒரு பெண் மொபைல் போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடன் இருப்பவர்கள் சென்று பார்த்து, மொபைல் போனை கைப்பற்றினர். தொடர்ந்து, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். விசாரணையில், நாகராஜின் மொபைல் போன் என்பதும், அவர் கழிவறைக்கு சென்ற பெண்களை வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார், நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்