உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

குளித்தலை : குளித்தலை அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.குளித்தலை அடுத்த, கள்ளபள்ளி பஞ்., ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார், 28. இவர் பல்சர் பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில் திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கட்டளை பிரிவு ரோடு அருகே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த, போர்டு கார் அதிவேக வந்து பைக் மீது மோதியது.இதில் கீழே விழுந்த பிரவீன்குமார் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவரை, பரிசோதித்தபோது ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து பிரவீன்குமாரின் சகோதரி திவ்யா, 30, கொடுத்த புகார்படி லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் மேல முனையனுாரை சேர்ந்த ராஜசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி