உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணி பூமி பூஜை செய்து துவக்கி வைப்பு

ரூ.1 கோடி மதிப்பில் திட்டப்பணி பூமி பூஜை செய்து துவக்கி வைப்பு

குளித்தலை:குளித்தலை அடுத்த இரணியமங்கலம் பஞ்., பணிக்கம்பட்டி சந்தை, அரசு ஆரம்ப சுகாதார மையம் அருகே, மாணிக்கபுரம் செம்மேட்டுப்பட்டி கிராமத்தில் சிமென்ட் சாலை மற்றும் இரணியமங்கலம், எருமநாயக்கன்பட்டி ஆகிய கிராமத்தில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, பஞ்., தலைவர் ரம்யா சரவணன் தலைமையில் நடந்தது. குளித்தலை ஒன்றிய செயலாளர் சந்திரன், மருதுார் நகர செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய பொறுப்பாளர் கோபி, தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி, யூனியன் கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.இதேபோல், நல்லுார் பஞ்., திருமலைரெட்டிப்பட்டி, ராஜலிங்க கவுண்டனுார், நல்லுார் தேவேந்திர தெரு, கீழப்பட்டி ஆகிய கிராமத்தில் சிமென்ட் சாலை, ஆர்த்தாம்பட்டியில் சிறுபாலம், நல்லுாரில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளுக்கு, பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. பஞ்., தலைவர் கலா குணசேகரன் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., மாணிக்கம் பூமி பூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். பஞ்., துணைத்தலைவர் அருள்ராஜ், பஞ்., செயலாளர் நாகராஜன், மற்றும் நல்லுார் தி.மு.க.,வினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை