உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வீட்டில் வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் திருட்டு

வீட்டில் வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் திருட்டு

கரூர் : வீட்டின் பூட்டை உடைத்து, பணம் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, ஊரணி மேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 42. இவர் கரூர் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பார்த்த போது, 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்