உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூரில், கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரியத்தில், 43 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளது. அனைத்து பணிகளை மேற்கொண்டு வரும் கேங்மேன்களுக்கு, கள உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பல கி.மீ., துாரம் சென்று பணிபுரிந்து வரும் கேங்மேன்களுக்கு சொந்த ஊரில் இடம் மாற்ற வேண்டும். உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற, 5,499 பேருக்கு உடனடியாக பணி நிய-மனம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலி-யுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில செய-லாளர் ராஜா, மண்டல செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை