| ADDED : ஏப் 26, 2024 04:01 AM
நாமக்கல்: தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கி, பா.ஜ., கவுரவப்படுத்தியுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்ட கொ.ம.தே.க., செயலர் பழனிவேல், 54. இவர் கருத்து வேறுபாடால் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு முன், பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கத்தை அணுகினார். அவர், பழனிவேலை கட்சியில் இணைத்ததுடன் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் தேர்தல் பணி பொறுப்பாளராக நியமித்தார்.ஓட்டுப்பதிவுக்கு பின், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பழனிவேலுக்கு, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் பதவிக்கு ராமலிங்கம் பரிந்துரை செய்தார். இதன்படி, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாநில தலைவர் அண்ணாமலை ஒப்புதலுடன் பழனிவேலுவை மாவட்ட செயலராக நியமித்துள்ளார்.இதேபோல், பா.ஜ., மேற்கு மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த, 6வது வார்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பழனிசாமி, நீலகிரிக்கு சென்று மத்திய அமைச்சர் முருகனுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதையடுத்து ராமலிங்கம் பரிந்துரையின்படி, பழனிசாமியை மாவட்ட செயலராக மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார் அறிவித்தார்.