உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிட் இந்தியா திட்டத்தில் சைக்கிள் பயணம் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு

பிட் இந்தியா திட்டத்தில் சைக்கிள் பயணம் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு

கரூர்: 'பிட் இந்தியா' திட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை-யிலான சைக்கிள் பயணம் மேற்கொண்ட, புகழூர் டி.என்.பி.எல்., பணியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மத்திய அரசின், 'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ், சர்தார் வல்ல-பபாய் படேலின், 150-வது பிறந்த நாளை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான சைக்கிள் பயணம் நடக்கிறது. இந்த பயணம், 2025 அக்., 31 ஸ்ரீநகரில் தொடங்கி, பஞ்சாப், டில்லி, ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநி-லங்கள் வழியாக பயணித்து, நேற்று தமிழகத்தில், கன்னியாகும-ரியில் முடிவடைந்தது. இப்பயணத்தில், கரூர் மாவட்ட புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையின் பேப்பர் மெஷின் உற்-பத்தி பிரிவில் பணிபுரியும் உதவி மேலாளர் ஸ்ரீசவுந்தரப்பிரியன் கலந்துகொண்டு, 4,249 கி.மீ., துாரம் சைக்கிள் ஓட்டுதல் பய-ணத்தை வெற்றிகரமாக முடித்தார். அதில், 150 பேர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று முன்தினம், கரூர் மாவட்டம், புகழூர் வழியாக சென்ற இவர்களை கவுரவிக்கும் விதமாக, காகித ஆலையில் அனைவருக்கும் மதிய உணவு வழங்-கப்பட்டது. அப்போது, காகித ஆலையின் முதன்மை பொது மேலாளர் (மனித வளம்) கலைச்செல்வன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ