உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று முதல் டோக்கன் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்று முதல் டோக்கன் வினியோகம்

கரூர்: பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில், இன்று முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொங்கல் திருவிழாவையொட்டி, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை வரும், 10ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.அதை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் அரிசி பெறும் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதற்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், நேரம் குறித்த டோக்கன் இன்று முதல் வரும், 9 வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.இந்த பணிகளில் குறை இருந்தால், 1967-1077 என்ற கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணிலும், 04324-257510 என்ற எண்ணிலும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ