மேலும் செய்திகள்
இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்
09-Jun-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில், இயற்கை விவசா-யத்தில் நிலையான வேளாண்மை மற்றும் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறுவதற்கான அங்கக இடுபொருட்கள் தயாரிப்-பது, அதனை பயன்படுத்துவது குறித்து ஒரு நாள் பயிற்சியளிக்-கப்பட்டது. வேளாண் அறிவியல் மையத்தின், உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் திருமுருகன், செய்முறை விளக்கங்க-ளுடன் ஆலோசனை வழங்கி பயிற்சியளித்தார்.இதில், இயற்கை முறையில் மண்வளத்தை மேம்படுத்த, பலதா-னிய பயிர் விதைப்பது, மண் ஆய்வுகள், பல அடுக்கு பயிர் சாகு-படி தொழில் நுட்பங்கள், விதைக்கு ஊட்டம் அளித்து முளைப்பு திறனை மேம்படுத்துவதற்கான பீஜா அமிர்தம் பயன்பாடுகள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பெருக்குவதற்காக, ஜீவா அமிர்த கரைசல் பயன்பாடு, கன ஜீவா அமிர்த பயன்பாடு, பயிர் கழிவுகளை கொண்டு மூடாக்கு அமைத்தல், மண்ணின் காற்-றோட்டத்திற்காக சீரான பாசன நீர் தொழில்நுட்பம், பஞ்சகவ்யா பயன்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார்.மேலும், இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்-மைக்கு இயற்கை பூச்சி விரட்டிகளான, 5 இலை கரைசல் குறித்து எடுத்துரைத்தார். இதில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல், தசகாவ்யா பயன்பாடுகள் இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்-கிகளான மீன் அமினோ அமிலம் மற்றும் முட்டை அமினோ அமிலம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாக பயிற்சி-யளித்தார். இப்பயிற்சியில், 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பய-னடைந்தனர். பயிற்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயிக-ளுக்கும் சான்றிதழ், தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்பட்-டன.தி.மு.க., செயற்குழு கூட்டம்
09-Jun-2025