புலியூரில் மரம் நடு விழா
கரூர்: கரூர் அருகில் புலியூர் கணேசபுரத்தில், பசுமை புலியூர் இயக்கம் சார்பில் மரம் நடு விழா நடந்தது.புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர் கண்ணன் தலைமை வகித்தார். கரூர் விளையாட்டு மேம்பாட்டு கழக தலைவர் திருப்பதி மரக்-கன்றுகளை நட்டு வைத்தார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்-வாரின் கருத்துப்படி, சிறு இடத்தில் தாவரத்தை அதன் போக்கில் வளரச்செய்யுங்கள் என்ற கூற்றின்படி, இப்பகுதியில் மரக்கன்று நட்டுள்ளனர். பசுமை பரப்பை புலியூர் சுற்றி பொது இடங்கள், விருப்பமுள்ள வீடுகளில் மரம் வைத்தல், குளங்களில் பனை விதை நடுதல், மாதத்திற்கு ஒரு முறை சுற்றுச்சூழல் கருத்த-ரங்கம், உடல் சார்ந்த சிறுதானிய உணவு போன்ற விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்படும் என, இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு தெரிவித்தார்.