பிள்ளபாளையம் சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி
கிருஷ்ணராயபுரம், பிள்ளபாளையம் சாலையில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு புதிய மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு பகுதியில் இருந்து பிள்ளபாளையம் பிடாரி அம்மன் கோவில் வரை, பஞ்சாயத்து சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. கிளை பாசன வாய்க்கால் கரை அருகில், பல்வேறு வகையான மரக்கன்றுகள் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.