கோரக்குத்தி கிராமத்தில் விளக்குகள் பழுதால் அவதி
கிருஷ்ணராயபுரம், கோரக்குத்தி கிராமத்தில், தெரு விளக்குகள் பழுதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி பஞ்சாயத்து கோரக்குத்தி, நத்தமேடு ஆகிய கிராமங்களில் சாலையோரம் பஞ்சாயத்து சார்பில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோரக்குத்தி, நத்தமேடு பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள், கடந்த சில நாட்களாக சரி வர எரியாமல் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில், போதிய வெளிச்சம் இன்றி காணப்படுகிறது. எனவே, பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு, புதிய விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.