உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் குழாயில் உடைப்பு சரிபார்ப்பு பணி மும்முரம்

குடிநீர் குழாயில் உடைப்பு சரிபார்ப்பு பணி மும்முரம்

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி நெடுஞ்சாலை அருகில், காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிபார்க்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி காவிரி ஆற்றில் இருந்து மதுரை, மேலுார் வரை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், கரூர் - திருச்சி நெடுஞ்சாலை சிந்தலவாடி யோக நரசிம்மர் கோவில் செல்லும் சாலை அருகில், உடைப்பு ஏற்பட்டு வீணாக காவிரி நீர் சென்றது.இதை தடுக்கும் வகையில், காவிரி நீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தை பொக்லைன் இயந்திரம் கொண்டு, பணியாளர்கள் மூலம் பறிக்கப்பட்டது. விரிசல் ஏற்பட்ட குழாய் மாற்றும் பணியில், குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி