உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

குளித்தலை: குளித்தலை அடுத்த, மாயனுார் பஞ்., கீழமாயனுார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ், 66, விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று காலை, 6:30 மணியளவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்-சாலையில், கிழக்கு பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு, சாலையில் நடந்து சென்றார். அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார் மோதிவிட்டு நிற்காமல் சென்-றது. இதில் சம்பவ இடத்திலேயே முத்துராஜ் பலியானார். பொது மக்கள் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் விபத்து ஏற்ப-டுத்தி தப்பி ஓடிய காரை கரூரில் மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில், கரூரை சேர்ந்த நவீன் என்பவர் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, மாயனுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை