உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள்

தார்ச்சாலை புதுப்பிக்கும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம், சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, சடையம்பட்டி-கோடங்கிப்பட்டி பிரிவு சாலையை புதுப்பிக்கும் பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து சடையம்பட்டி பகுதியில் இருந்து, கோடங்கிப்பட்டி பிரிவு வரை தார்ச்சாலை உள்ளது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து, சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு சிதலமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், சாலை புதுப்பிக்கும் வகையில் பழைய சாலைகள் இருந்த கற்கள் அகற்றப்பட்டன. பின் பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலைகளை மேம்படுத்தும் பணி நடந்தது. மேலும் சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில், சமன்படுத்தும் பணி நடந்தது. தொடர்ந்து புதிய சாலை அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை