மேலும் செய்திகள்
பட்டா கத்தியுடன் ரகளை வீடியோவால் 2 பேர் கைது
05-Oct-2025
பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், இடையப்பட்டி பஞ்., புதுமடை புதுாரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 24, ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியளவில் தரகம்பட்டி கடைவீதி பகுதியில், பட்டா கத்தியை வைத்துக்கொண்டு, இந்த ஏரியாவில் நான்தான் ரவுடி என்று கூறியதுடன், தகாத வார்த்தைகளால் கூச்சலிட்டபடி நின்றார். இதனால் பொதுமக்கள் பயந்து ஓடினர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சிந்தாமணிபட்டி போலீஸ் எஸ்.ஐ., தங்கசாமி மற்றும் போலீசார் சேர்ந்து, பட்டாக்கத்தியுடன் மிரட்டியபடி இருந்த ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.
05-Oct-2025