உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க கோரிக்கைஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த இலக்கம்பட்டி கிராம பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தடுப்பணை அமைந்தால், பாவக்கல் பஞ்., மேற்கு பகுதி, காட்டேரி பஞ்., கிழக்கு பகுதி, தர்மபுரி மாவட்டத்தின் நாரியம்பட்டி கிராம பகுதியில், ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், 5,000 ஏக்கர் பரப்பளவில், மூன்று பருவங்களிலும் விவசாயம் செய்ய தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயத்தை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை