உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புதுமை பெண், தமிழ் புதல்வன்திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

புதுமை பெண், தமிழ் புதல்வன்திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

புதுமை பெண், தமிழ் புதல்வன்திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்ட, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தில், 62 கல்லுாரிகளை சேர்ந்த, 10,714 மாணவியர் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தில், 71 கல்லுாரிகளை சேர்ந்த, 10,634 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய மாணவ, மாணவியரின் விபரங்கள், ஆதார் இணைப்பு நிலுவையிலுள்ள விபரங்கள், பள்ளி கல்வித்துறையின் மேல்முறையீடு நிலுவையில் உள்ள விபரங்கள் குறித்து, அதிகாரிகள் விசாரித்து, உடனடியாக அதை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாவட்ட சமூகநல அலுவலர் சக்தி சுபாசினி, அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வர் கீதா, மாவட்ட மின் ஆளுமை மேலாளர் ஹரிகரன், பள்ளிக் கல்வித் துறை உதவித்திட்ட அலுவலர் வடிவேலு, ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், கல்லுாரிகளின் பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை