மேலும் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில்கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
10-Jan-2025
ஓடிய லாரியில் மாரடைப்பால் டிரைவர் பலிஓசூர்,:மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலிருந்து, கேரள மாநிலம் கொச்சி நோக்கி, உணவு பொருட்களை ஏற்றிய குளிர்சாதன கன்டெய்னர் லாரி நேற்று சென்றது. ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில் மூவேந்தர் நகரில், மேடான பகுதியில் நேற்று மாலை, 4:15 மணிக்கு லாரி சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, பின்நோக்கி வந்தது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். சாலையோரம் நின்றிருந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சாலையோர கடைகள் முன் நிறுத்தியிருந்த, 5 டூவீலர் மீது மோதிய லாரி, அங்கு குவித்து வைத்திருந்த மண் மீது ஏறி நின்றது. லாரியில் அமர்ந்த நிலையில் டிரைவர் இறந்து கிடந்தார். ஹட்கோ போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். இதில், லாரி டிரைவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இஸ்ரார் அகமது, 39, என்பதும், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
10-Jan-2025