மேலும் செய்திகள்
தனியார் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
07-Aug-2024
கிருஷ்ணகிரி: ஓசூர், தனியார் நிறுவன ஊழியரிடம், முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக கூறி, 18 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானசந்திரத்தை சேர்ந்தவர் கோபால், 38, தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஜூலை, 14ல், இவரது மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், பகுதி நேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் தரப்படும் என கூறப்பட்டிருந்தது. இதை நம்பி அவர் சிறிதளவு முதலீடு செய்தார். அந்த தொகைக்கு லாபத்துடன் பணம் திரும்ப வரவே, தான் வைத்திருந்த, 18 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.அதன் பிறகு அவரது எண்ணிற்கு எந்த தகவலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் தனக்கு குறுந்தகவல்கள் வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோபால் இது குறித்து நேற்று முன்தினம் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Aug-2024