| ADDED : மார் 13, 2024 02:16 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
வட்டார வளமையம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில்,
மாற்றுதிறன் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பள்ளி ஆயத்த
பயிற்சி மையத்தில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்
தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன்,
தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பலுான் உடைக்கும்
விளையாட்டு, நடித்து விளையாடு, புதிரை கண்டுபிடி ஆகிய தலைப்புகளின்
கீழ் மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு
போட்டிகள் நடத்தப்பட்டன.நிகழ்ச்சியில், மாவட்ட
ஒருங்கிணைப்பாளர் அப்துல்சர்தார், 'இணைவோம், மகிழ்வோம் செயல்பாடு
மூலம் அனைத்து பள்ளிகளில் மாதத்தின் முதல் திங்கள்கிழமை காலை வணக்க
கூட்டத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும். பள்ளி சேர்க்கை விழிப்புணர்வு
பேனர், சைகை மொழி செயல்பாடுகளை தொடர வேண்டும். மாணவர்களுக்கு கல்வி,
கலை, பண்பாடு மற்றும் விளையாட்டில் சமவாய்ப்பு வழங்குவதன் மூலம்,
அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது' என்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கப்பட்டன.