| ADDED : மார் 28, 2024 02:31 AM
ஓசூர்:ஓசூர்
அருகே மடிவாளம் பகுதியில், அரசு துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆங்கில வழி கல்வி பயின்று
வருகின்றனர். மாணவ, மாணவியர் அமர்ந்து சாப்பிட உணவுக்கூடம்
இல்லாததால், மதிய நேரங்களில் வெயிலில் அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலை
இருந்தது. எனவே, உணவுக்கூடம் கட்டி தர வேண்டும் என, ஐ.டி.சி., என்ற
நிறுவனத்தை பள்ளி தலைமையாசிரியர் குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு
உறுப்பினர்கள் தொடர்பு கொண்டு பேசினர்.இதையடுத்து, ஐ.டி.சி.,
நிறுவனம் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, 8 லட்சம் ரூபாயை
ஒதுக்கியது. பள்ளி மாணவ, மாணவியரின் பெற்றோர் சார்பில், 2 லட்சம்
வழங்கப்பட்டது. அதன்படி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி வளாகத்தில்
உணவு கூடம் கட்டப்பட்டது. இது, மாணவ, மாணவியரின் பயன்பாட்டிற்கு
நேற்று திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் ஐ.டி.சி.,
நிறுவனத்தினர் மரக்கன்றுகளை நட்டனர்.